- Name: Senkottai
- Surname: Sriram
- Location: Chennai
- About Me: காவிரிக் கரை திருச்சியில் பிறந்து, பரணிக் கரை நெல்லையில் வளர்ந்து, அருவிக் கரை குற்றாலத்தில் தமிழ் கற்று, பாலாற்றுக் கரை சென்னையில் வாசம். பள்ளிப்படிப்பு செங்கோட்டை, தென்காசியில். கல்லூரி : BSc., Maths (பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி) MBA, MA., Journalism Mass Communication - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் |
*‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். |
* சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |
* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |
* விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார்.|
* சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். |
* இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது.
- URLs: